700 தாதிகளுக்கான நியமனக்கடிதங்கள் சுகாதார அமைச்சரால் வழங்கிவைப்பு..!

தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக, 700 விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (31.10.2025) இலங்கை தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.

தேசிய பல்கலைக்கழகங்கள் மூலம் விஞ்ஞானவியல் தாதி பட்டப்படிப்பை  நிறைவு செய்த பட்டதாரிகள், இலங்கை தாதியர் சேவை பிரமாணக் குறிப்பின்படி, தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். 

இந்தப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள், வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவைத் தேவைகளை கருத்தில் கொண்டு, III ஆம் தர தாதி உத்தயோகத்தர்களாக  நியமிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு,  தாதியர் சேவைக்காக மொத்தம் 4,141 தாதி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில், மேலும் 2,600 பேரை தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தாதியர் பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை 2021 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் II) பி.டபுள்யூ.சி. சுமேதா பிரியபாஷிணி, மேலதிக செயலாளர் (நிர்வாகம் II) சாமிக கமகே, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம் III) ஹர்ஷபிரிய சிசிர குமார உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகளும் நியமனதாரிகளும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை