2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10.11.2025) ஆரம்பமாவதுடன், டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்து பரீட்சைக்கு 9547 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு ஆகிய ஐந்து கல்வி வலயங்களில் இருந்து 3750 ஆண் பரீட்சார்த்திகளும் 5383 பெண் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், இதில் தமிழ் மொழி மூலமாக 9487 பரீட்சார்த்திகளும், ஆங்கில மொழி மூலமாக 51 பரீட்சார்த்திகளும் சிங்கள மொழி மூலமாக 9 பரீட்சார்த்திகளும் இப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன், இதில், 246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,004 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.