மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்து.!

 இன்று (02.11.2025)மதியம் 1,மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான  சாலையில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு (SVIAS ) முன்னால் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே  மட்டக்களப்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேனின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த மோட்டார்சைக்கிள் மோதிய நிலையிலே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில் வீதியின் குறுக்காக மாடு  பாய்ந்ததால் வேன் சடுதியாக பிரேக் அடித்து நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேனின் பின் பகுதியில் மோதியுள்ளது.

இவ் விபத்தின் போது சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன்  காயமடைந்துள்ளார்.
புதியது பழையவை