மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் ஆவி பேசுகிறது..!இன்று (20, வது ஆண்டு நினைவு)

அன்பார்ந்த ஈழத்தமிழ் உறவுகளே..!

கடந்த இருபது வருடங்களுக்குமுன் ஜேசுபாலன் பிறப்பு தினமான நத்தார் நன்நாளில் 2005, டிசம்பர்,25,ல் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது என்னை அந்த கொலையாளிகள் சுட்டுகொன்றனர்…

என்னை துப்பாக்கியால் சுட்டவர்கள் அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் எல்லோரும் இன்று பதவிகளும், சலுகைகளும் பெற்று ஆடம்பரமாக வாழ்கின்றனர்….
20, வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை…

நான் தமிழ்த்தேசிய கொள்கையுடன் உறுதியாக சோரம்போகாமல் தந்தை செல்வாவால் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, பின்னர் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எல்லா அரசியல் கட்சிகளுடனும் கொள்கை மாறாமல் அந்தந்தக்காலக்கட்டங்களில் எனது அரசியல் பணியை அற்பணிப்புடன் உறுதியுடனும் உண்மையுடனும் பயனித்தமையால்  எதிரியால் சுடப்படவில்லை தமினின துரோகிகளால் சுடப்பட்டேன்..
என்னை கொலைசெய்தமையால் தமிழ்தேசிய கொள்கை கொலை செய்யப்படவில்லை என்பதை அந்த கொலைகாறர்களும் அதனை தூண்டியவர்களும் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

என்னை இனப்படுகொலைசெய்யும்போது மகிந்தராஷபக்ச ஜனாதிபதியாக இருந்தார் அதற்கு பின்னர் மைத்திரி, கோட்டபாய,ரணில் ஆகிய நால்வர் ஜனாதிபதிகளாக ஆட்சியில் இருந்தனர் எனது கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை இப்போது 2024, தொடக்கம் 2025, ல் எனது நினைவு தினம் நடக்கும் வேளையில் அநுரகுமார திசநாயக்கா ஜனாதிபதியாக உள்ளார் அவரால் கூட என்னை கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற ஏக்கம் எனக்கு உள்ளது. 


ஊழல்வாதிகளுக்கும், போதைவஷ்துக்காறர்களுக்கும் தூண்டில் போடும் அவர் தமிழினப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை.                                                   

யார் ஆட்சியில் இருந்தாலும் இலங்கையில் தமிழின்துக்கு நீதி கிடையாது என்பதால்தான் சர்வதேச நீதியை வேண்டி தமிழர்கள் கோரிக்கை விடுகின்றனர் சர்வதேசமும் கடந்த 16, வருடங்களாக தமிழினத்தின் வேண்டுதலை செவிசாய்க்கவில்லை இருந்தபோதும் அவர்கள் மிது நம்பிக்கை வைத்து ஈழத்தமிழர்கள் செயல்படுகிறார்கள்.

என்னைப்போல் தமிழ்த்தேசியக்கொள்கையில் உறுதியாக ஈழமண்ணில் செயலாற்றியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். ஊடகவியலாளர்கள்,மாவீரர்கள், உதவி செய்தவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்ட  அனைத்து தமிழர்களுடைய ஆவிகள் என்னொடு இணைந்து மேல்லோகத்தில் இருந்து ஈழமண்ணை பார்துக்கொண்டு எப்போ விடியும் என்ற ஏக்கத்துடன் உள்ளோம். 
                                                                                ஒருநாள் விடிவு வரும் சுதந்திரம் அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என்னைப்போன்று தமிழினப்பற்றுள்ளவர்களின்  ஆவிகள் எதிர்பார்து ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்.

ஆனால் ஈழத்தில்  இப்போது பல பெயர்களில் தமிழ்த்தேசிய கட்சிகள் முளைத்துள்ளன, பலபேர் தலைவர்கள் என கூறுகின்றனர் ஒரு முடிவை ஒருமித்து ஒற்றுமையாக எடுக்கமுடியாம் தமிழர்கள் திண்டாடுவதை பார்த்து கவலையாய் உள்ளது…


பதவிக்கும், தேர்தலுக்கும், மட்டும் ஆர்வமாக செயல்படும் தமிழ்த்தேசிய கட்சிகள் தமிழ்மக்களை தேசமாக திரட்ட முடியாமல் திண்டாடுவதை பார்த்து வேதனை படுகிறேன்.

பல கட்சிகள் இருப்பதை நான் குறை கூறவில்லை எல்லாக்கட்சிகளும் இணைந்து ஒருமித்து தமிழினத்திற்கான தீர்வு இதுதான் என ஒரு குரலில் வலியுறுத்துவதற்காக இணக்கப்பாட்டை காணுங்கள் என்றுதான் கூறுகிறேன்…

புலம்பெயர் உறவுகளும் ஒற்றுமையாக தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எமது இலட்சியம் வெல்லும்வரை வடகிழக்கு தமிழர்களை தேசமாக திரண்டு அறவழியில் செயல்படுமாறு இன்றைய நத்தார் நாளில் உங்களை வேண்டுகிறேன்.

இங்ஙனம் நான்
மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் ஆவியின் குரல்.

பதிவு:பா.அரியநேத்திரன்-
25/12/2025
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
புதியது பழையவை