இலங்கை தமிழ் அரசு கட்சி வசமுள்ள மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று(16.12.2025)ஆம் திகதி இடம் பெற்றபோது மேலதிகமாக10 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின், 08 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் , ஐக்கிய மக்கள் சக்தியின் 01 உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 01 உறுப்பினர், சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.