அம்பாறை,தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (17.12.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 33 வயதுடைய பெண்ணும் அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் தந்தை மற்றும் இரண்டாவது மகன் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.