மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாம்..!

இளைஞர் யுவதிகள் சமூகத்தின் இரு கண்கள் அவர்களின் துடிப்பு, ஆற்றல், வினைத்திறன் மிக்க செயற்பாடு சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.

"இளைஞர்களின் எழுச்சி" என்பது வெறும் கோஷம் அல்ல, அது ஒரு செயல் வடிவம், மாற்றத்திற்கான சக்தி இளைஞர் சக்தி 

 இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் கழக அங்கத்தவர்கள் தலைமைத்துவம் மற்றும் திறன் விருத்தியினையும் மேம்பட செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கும் YOUTH IGNITE CAMP_2025 இளைஞர் தலைமைத்துவ பயிற்சி பட்டறை முகாம் போரதீவு பற்று பிரதேசசெயலக வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில்  நேற்றைய தினம் (21.12.2025)ஆம் திகதி இடம் பெற்றன.

இன் நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரி வித்தியன் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டலில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதீதியாக போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் கலந்து சிறப்பித்தார்.

மேற்படி  நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன்  மற்றும் வளவாளர்கள், மற்றும் இளைஞர் கழக பதவி நிலை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

மேற்படி நிகழ்வின் இறுதியில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகள் அனைவருக்கும் பெறுமதி மிக்க சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புதியது பழையவை