சமூக நலன்புரி(SWO) அமைப்பானது க.சற்குனேஸ்பரன் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பல சேவைகளை செய்து வருகின்றன.
இவ் அமைப்பானது அவுஸ்திரேலிய சைவ மன்றத்தின் நிதி உதவியின் கீழ், முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு கடந்த (15.12.2025)ஆம் திகதி பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை சமுகநலன்புரி அமைப்பின்(SWO) உப தலைவர் அ.சதானந்தம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டுடனர்.
இன் நிகழ்வின் விபுலானந்தபுரம் கிராம உத்தியோகத்தர் எஸ்.சங்கீர்த்தன் மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி அதிபர் சந்திரசேகரம்,
பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்ல முகாமையாளர், சமுக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் மற்றும் பணியாளர்கள், திலகவதியார் மகளிர் இல்ல முகாமையாளர் மற்றும் பணியாளர்கள், தையல் ஆசிரியை, சமுக நலன்புரி அமைப்பின் ஆலோசகர்கள், இல்ல நிர்வாகிகள், வாழ்வாதார உதவி பெறும் பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இல்லக் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.