அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரட்ன தேரரை பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (17.12.2025) உத்தரவிட்டுள்ளது.

அவரை ஒரு இலட்சம் ரூபா இரு சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டு குறித்த வழக்கை (20.01.2025)ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவியின்போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைதுசெய்யுமாறு கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு பயணத்தடை விதிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த தேரர், பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை