கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று (23.12.2025) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையிலான தவிசாளர் க.தெய்வேந்திரன் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.
பிரதேசத்தின் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கும் வகையில் 2026ம் ஆண்டுக்கான புதிய வரவு-செலவுத்திட்டத்தை தான் சபையில் முன்வைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.
இதன் போது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி -07, முஸ்லிம் காங்கிரஸ்-02, ஐக்கிய மக்கள் சக்தி-01 என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க தமிழரசுக்கட்சியின் 06 உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளிக்காத நிலையில், 2026ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 10 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.