போரதீவுப்பற்றில் பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கம்.!

பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கம் 2025 இன் செயற்றிட்டங்களுக்கு அமைய , மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 43 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் செயற்படும் சமூக அபிவிருத்தி குழுத் தலைவர்களை நியமிக்கும் நிகழ்வானது (15.12.2025)ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரான கௌரவ கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர்  அவர்கள் கலந்து கொண்டு தனது பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சமூக அபிவிருத்தி குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

நாட்டின் வறுமை ஒழிப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் கிராம மட்டத்தில் செயற்படும் குழுக்களுக்கு தலைமை தாங்கும் நபர்களை அறிவிப்பது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இதன் போது சமூக அபிவிருத்தி குழுத் தலைவர்களின் பொறுப்புகள் மற்றும் தார்மீகக் கடமைகள் தொடர்பாக அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டது. 
🔅இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், இ.நி.சே பயில்வு அலுவலர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி குழுத் தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை