மட்டக்களப்பு பிள்ளையாரடியில் விபத்து.!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதானவீதிக்கு அருகில் இன்று (04.01.2026) காலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொலும்பிலுருந்து சிலரை ஏற்றிவந்த வேன், மட்டக்களப்பில் இறக்கிவிட்ட பின்னர் செங்கலடி நோக்கி சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வேன், செங்கலடிக்கு சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மற்றுமொரு வாகனத்தின் சாரதி தூக்க கலகக்கத்தில் இருந்ததனால், எதிரே வந்த வேன் நோக்கி வந்துள்ளார்.

விபத்தை தடுக்கும் நோக்கில் வேன் சாரதி செயற்பட்ட போது வேன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள புல் புதருக்குள் நுழைந்து நின்றுள்ளது.

இதில் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை