சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.


சம்பவம் தொடர்பில்....

கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025)  ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது.
புதியது பழையவை