பதவி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை உரிய முறையில் ஏற்று, குறிப்பிடப்பட்ட இடங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும்.
2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்தல் வேண்டும்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துளார்.
பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.