இலங்கைக்கான ஜெர்மன் பிரதித் தூதுவர் சாரா ஹொசெல்பார்த் அவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட. இந்த ஆலயம், கிழக்கிலங்கையில் "சின்னக் கதிர்காமம்" என்று மக்களால் பக்திப்பூர்வமாகப் போற்றப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகும்.
அண்மைக்காலமாக தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வரும் பகுதிகளைப் பார்வையிடும் நோக்கில் ஜெர்மன் பிரதித் தூதுவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
அப்பகுதிகளில் தற்போது காணப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் அங்கிருந்தவர்களிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே, ஜெர்மன் பிரதித் தூதுவர் இந்த முக்கிய விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கள விஜயத்தின் போது பிரதித் தூதுவருடன் பல முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக
போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனன்,
முன்னாள் மாகாண காணி ஆணையாளர் க. குருநாதன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள்
ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.