செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மேலும் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றபோதே இவை அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 412 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
அடையாளமிடப்பட்ட 409 என்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினத்துடன் (23.06.2026)செம்மணி புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.