நாட்டில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சை பூசும் நடைமுறையை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கு அமைச்சரவை இன்று (23/06/2026) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பின்வரும் சட்ட விதிகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகக் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு
1988ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு
(262 ஆம் அத்தியாயமான)உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு
1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு
அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும், அழியாத மையைப் பயன்படுத்தி வாக்காளருக்கு உரிய குறியிடுவது தொடர்பான சட்ட விதிகளை நீக்குவது பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது என்பதை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.