உரிமம் இல்லாத பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை.!

சாரதி பயிற்சி நிலை
சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் கட்டாயமாக முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

 தகுந்த சான்றிதழ் இன்றி பயிற்சிகளை நடத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார். 

முறையற்ற பயிற்சிகள் காரணமாக இளைஞர்கள் மத்தியில் வீதி விபத்துகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை