பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி ஜேர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் வலியுறுத்தல்!

​மட்டக்களப்பு ஊடக அமையத்திற்கு இன்று(24.06.2026) மாலை விஜயம் செய்த இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்பார்த் அவர்களிடம், மட்டு ஊடக நிர்வாகத்தினர் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

​இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும், புதிய ஊடக சாசனத்தைத் தடுத்து நிறுத்தவும் ஜேர்மன் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

​மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் சந்திக்கும் தொடர் விசாரணைகள் மற்றும் சவால்கள் குறித்து தூதுவரிடம் விவரிக்கப்பட்டு, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரப்பட்டது.

​தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் தற்காலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அரசியல் தீர்வை வழங்க ஜேர்மனி ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

​இச்சந்திப்பில் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ. கிருஷ்ணகுமார், பொருளாளர் கிருஷ்டிராஜ் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.
புதியது பழையவை