அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி குமார் யனிஸ்கா, மொழிபெயர்ப்புக் கற்கையில் இளங்கலைமாணி சிறப்புப் பட்டம் (Bachelor of Arts Honours in Translation Studies - English/Tamil) பெற்று பொத்துவில் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் இத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் இளம் மாணவி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 03, 2026 அன்று சிறப்பாக நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் இவருக்கான பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ்மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை பயின்ற இவர், 2019/2020 கல்வியாண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.
தனது தொடர்ச்சியான விடாமுயற்சியின் மூலம் இச்சாதனையை எட்டியுள்ளார்.
தன் பாடசாலைக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி குமார் யனிஸ்கா, எதிர்கால மாணவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.