மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சேவகம் நிறுவனத்தின் ஊடாக
நேற்றைய(12.12.2025) தினம் அவுஸ்திரேலிய புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியின் ஊடாக மணியபுரத்தில் உள்ள பெண் தலைமை தாங்கும் 32 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி உதவிகளை வழங்கிய அவுஸ்திரேலிய புலம்பெயர் உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்.
நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மணியபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம், மணியபுரம் நாகபுசணி அம்மன் ஆலய நிர்வாகம், செங்கலடி பசுந்தளீர் விளையாட்டு கழக உறுப்பினர்கள், சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர். ஐயன்கேணி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.