மாவிலாறு அணைக்கட்டு வெடிப்பெடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை -வெருகல் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வீடு சுத்தம் செய்யும் உபகரணங்கள் இன்று (12.12.2025)ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலகத்தில் வைத்து இதன்போது 100 பயனாளிகளுக்கான 14 வகையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் தவிசாளர் ,UNOPS அமைப்பின் பிரதிநிதிகள்,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.