குருந்தனூருக்கு வந்த பௌத்த பிக்குகள்: சைவகுருமாரை காய விட்ட இராணுவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தனூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் நேற்று (30) மாலை சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த மலைப் அடிவாரப் பகுதியில் பொலீசார் படையினர் கடமைகளில் நின்றபோதும் எந்த வித தடையும் இன்றி தேரர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் பதிவிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குருந்தனூர் மலையினை பார்வையிட்டு வந்த தேரர்களை படம் எடுக்கவேண்டாம் என்று அங்கு கடமையில் நின்ற பொலீசாரால் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குருந்தனூர் மலைக்கு அருகில் உள்ள குருந்தனூர் குளத்தினையும் பார்வையிட்டுள்ளார்கள்.


இதேவேளை, சில தினங்களின் முன்னர் அங்கு சென்ற சைவ குருமார்களை பல மணிநேரம் வெயிலில் கருவாடு காயவிடுவதை போல காயவிட்டு, பின்னர் அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டமை, இலங்கையில் மதங்களிற்கிடையில் ஆட்சியாளர்கள் காண்பிக்கும் ஏற்றத்தாழ்வை பிரபலிப்பதாக அமைந்துள்ளது.











புதியது பழையவை