இன்று(15.12.2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின்( Ref&AC Technician) கற்கை நெறியினை தொடர்ந்து கொண்டிருக்கும் கிரானைச் சேர்ந்த கிசாளன் என்பவராகும்.
மிகுந்த கெட்டித்தனமான ஒழுக்கம் மிக்க இம் மாணவன் நாளை தனது பாடநெறியைப்பூர்த்தி செய்து அதற்கான நைற்றா பயிற்சி கடிதத்தை பெற்று பயிற்சியை தொடர இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.