கிழக்கு மாகாணத்தில் 16 கொரோனா மரணங்கள் பதிவு

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரை 16 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 10 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேரும் என இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, உஹனை, காத்தான்குடி மட்டக்களப்பு, வவுணதீவு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் சாய்ந்தமருதில் 04 மரணங்கள் சம்பவித்துள்ளன.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வரை கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2517 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதியது பழையவை