நாள் 5: யாழ் மாநகருக்குள் நுழைகிறது பேரணி

















யாழ் நகரின் நுழைவாயிலான, செம்மணி- யாழ் வரவேற்கிறது வளையில், பேரணிக்கு வரவேற்பளிக்கப்படுகிறது.

1.05PM

சாவகச்சேரியில் பேரணி இடம்பெற்று கைதடி நோக்கி நகர்கிறது

12.05PM

கொடிகாமம் நகரை அடைந்த பேரணி, அங்கு கவனயீர்ப்பு நடைபயணத்தில் ஈடுபட்ட பின்னர் சாவகச்சேரி நோக்கி நகர்கிறது.

10.45 AM

பேரணி இயக்கச்சி சந்தியை வந்தடைந்தது

10.00 AM

கரடிப் போக்கு, பரந்தன் சந்தியில் பேரணி அணிவகுத்து சென்றதை தொடர்ந்து, தற்போது நோக்கி பேரணி நகர்கிறது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியோரங்களில் நின்று தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இம்முறை புதிய மாற்றமான சிறு பிள்ளைகளும் அதிகளவில் போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பரந்தன் சந்தியில் மாற்று திறனாளிகள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து ஒன்று கூடியுள்ளனர்.

9.20 AM

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி, கிளிநொச்சியில் காலை 8.20 மணியளவில் ஆரம்பித்தது. பெரும் திரளான மக்கள் திரண்டிருந்த இந்த போராட்டத்தில் அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினோ நோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், ஈ.சரவணவன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்த பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்து கரடிப் போக்கிற்கு செல்கிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சி பேரணி புறப்பட தயாராகிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிசார், இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.





புதியது பழையவை