மட்டக்களப்பானை தலையில் வைத்து கொண்டாடிய வட கிழக்கு இளைஞர்கள்.



பிரதேச வாதம் பேசும் அன்பர்களே!!!
பிரதேச வாதம் பேசி பேசி மக்களை கறிவேப்பிலையாக உபயோகிக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அரசியல் கத்துக்குட்டிகளே நீங்கள் அனைவரும் ஒன்றை அறிவீர்களா?

#P2P என்று அனைவராலும் பேசப்பட்ட அதாவது இனம் மதங்கள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டு நடாத்தப்பட்ட புனித போராட்டமான பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான நடைபயண போராட்டத்தின் இறுதி நாளான 07ம் திகதி வடக்கு கிழக்கு இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினராலும் தலைமேல் வைத்து கொண்டாடப்பட்ட #சாணக்கியன் தான் பொலிகண்டியில் நினைவு கல் நட வேண்டும் என்று வடக்கு இளைஞர்கள் மட்டுமன்றி தாய்மார்களும் விடாப்பிடியாக இருந்தனர். 

அவர்களின் உணர்வுகளை மதித்து மீண்டும் பொலிகண்டி கடற்கரைக்கு சென்று ஒரு கல்லை நட்டுவைத்தார். 

இதுவா பிரதேசவாதம்? வடக்கு இளைஞர்கள் சாணக்கியனை தலைமேல் வைத்து கொண்டாடியதை பொறுக்க முடியாத வடக்கை சேர்ந்த பிரபல அரசியல் வாதியின் ஒரு ஈனச்செயல் தான் சாணக்கியனை தாக்குவதற்கு முயற்சி செய்தது. இவற்றை குறித்த தாக்குதலுக்கு முயற்சித்தவரே ஏற்றுக்கொண்டார். 

அனைவருக்கும் இந்த புனித போராட்டம் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி நடைபெற்று  வரலாற்று தடம் பதித்து விடக்கூடாது என்று நினைத்தவர்களே பலர். 

ஆனால் நினைத்ததை விட சிறப்பாக நடைபெற்று முடிந்து விட்டது. இதில் இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த #P2P போராட்டத்திற்கு பலர் முன்னெழுத்து போட முயற்சிப்பதும், புனித அறவழி போராட்டத்தை இழிவாக பேசியவர்களும் இன்று உரிமை கோருவதுதான் வேடிக்கை. நான் யாரென்று கூற வேண்டிய தேவையில்லை. நீங்கள் அறிவீர்கள் என்பது எனது கண்கூடு.



பொத்துவில்லுடன் முடிய வேண்டிய அறவழிப்போராட்டத்தை #P2P என்று சாத்தியமாக்கியவர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே. ஏன் கூறுகின்றேன் என்றால் முன்னரங்கங்களை தகர்தெறிந்த பெருமையும் அவர்கள் இருவரையுமே சாரும். பொத்துவில்லில் பொலிசார்,  STF மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தது. ஆயுதங்கள் கொண்டு முடக்க முற்பட்ட போராட்டத்தை இறுதி வரைக்கும் எடுத்துச் சென்ற பெருமை வீரத்தமிழர்கள் சாணக்கியன் மற்றும் சுமந்திரனையே சாரும். 



புதியது பழையவை