காடழிப்பு விவகாரம் தொடர்பில் பௌத்த பிக்கு ஒருவர் மீது பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண குற்றம்சாட்டிள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கலந்துரையாடலில், அதிகாரிகளின் மெத்தனம் குறித்தும் விமர்சித்துள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த பௌத்த பிக்கு என கூறினாலும், அவரது அடையாளத்தை பாதுகாப்பு செயலாளர் வெளிப்படுத்தவில்லை.
எனினும், அரிசிமலை பகுதியில் நடக்கும் காடழிப்புடன் தொடர்புடைய பனத்முரே திலகவன்ஸ தேரரே அந்த நபர் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.