உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் குருணாகலை மலியதேவ பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை விரைவில் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைவாக, ஏப்ரம் மாதம் வௌியிடப்படும் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பல்கலைகழகங்களுக்கு இணைத்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இம்முறை சாதாரண தர பரீட்சை பெறுபெறுகளை எதிர்வரும் ஜூன் மாதம் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.