தமிழர்கள் உரிமை போராட்டங்களுக்கு வாக்கு மூலம் வாங்கும் பொலிஸ் ! என் தந்தை ஒட்டுக்குழுக்களால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எந்த விசாரணையும் இல்லை
21/02/2021 இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடந்த நடைபவனி பேரணிதொடர்பாக வாக்குமூலம் வாங்குவதற்கு பொத்துவில் பொலிஸ் எனது இல்லத்துக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கிச் சென்றனர்
ஆனால் 06/04/2007 அன்று எனது தந்தை எனது இல்லத்தில் துடிதுடிக்க ஒட்டுக்குழுக்களாலோ அல்லது அரசபடையினாலோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக இலங்கை காவல் துறையினால் என்னிடம் எவ்வித வாக்குமூலங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை மாறாக
தமிழர்கள் உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு நான் சென்றாலோ எமது உறவுகளை நினைவு கூறினாலோ எமது இல்லத்துக்கு வந்து வாக்குமூலம் எடுப்பது காவல்நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் எடுப்பது எனது வீட்டுக்கு வந்து Cid என கூறி 2017 எழுகதமிழ் போராட்டத்தில் தொடங்கி 2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இன்று வரை வாக்குமூலம் கொடுத்தவண்ணமாகவே எனது வாழ்க்கை நகர்கின்றது
என்மீது காட்டும் இலங்கை அரசின் அக்கறை எனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் மீது காட்டியிருந்தால் குற்றவாளி யாரென தெரிந்திருக்கும் எனது தந்தை நிலை எனக்கும் ஏற்படலாம் அனைத்தையும் எண்ணி அழுது கொண்டிருப்பவன் நானல்ல எஞ்சிய எமது இனத்துக்காக உயிர் உள்ளவரை உயர குரல் எழுப்புவேன்
உலகளாவிய மொழிதினத்தில்
என் உயிரிலும் மேலான தமிழ் மொழிக்கு வாழ்த்துக்கள்!