(ரஞ்சன்)
மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு முகக் கவச கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டில் வேகமாக பரவிக் கொண்டு வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயாகும் இதனால் பெற்றார் சிரமத்தின் மத்தியில் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புகின்றனர் அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பழுகாமம் விபுலானந்த வித்தியாலய மாணவர்களுக்கு முகக்கவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பக் பிரிவுகளில் அதிகூடிய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையாகவுள்ள பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின் மாணவர்களிpன் நன்மை கருதி இவை வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர் கனபதிப்பிள்ளை ராஜகுமாரன் தலைமையில் இந்த முகக்கவச கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பழுகாமம் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் அவுஸ்திரேலியா . பழுகாமம் பரம்பரை ஒன்றியம்(PAPA) லண்டன் ஆகிய இரண்டு அமைப்புகளும் பழுகாமம் விபுலானந்த வித்தியாலய அதிபர் அவர்களின் வேண்டுதலுக்குஅமைவாக 350 முகக்கவச கண்ணாடிகளை வழங்கியுள்ளன.
பாடசாலை அதிபர் அவர்களினால் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வரும்போதும் பாடசாலை பாடநேரங்களிலும் முகக்கவச கண்ணாடிகளை அணிவித்து பாடசாலைக்கு வருகை தரவேண்டும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை பேணவேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த அதிபர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திருப்பழுகாமம் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் அவுஸ்திரேலியா . பழுகாமம் பரம்பரை ஒன்றியம்(PAPA) லண்டன் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.