ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய குழுவினர் அங்கிருந்த யுவதி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 1.30 மணியளவில் வேன் ஒன்றில் சென்ற நால்வர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டின் வெளிக்கதவை உடைத்து உள்நுழைந்த போது வீட்டின் உரிமையாளர் அவர்களை தாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த குழுவினர் அவரை திருப்பி தாக்கிவிட்டு உறக்கத்திலிருந்த 21 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர் .
மொட்டுக்கட்சியில் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட விஸ்னுகாந்தன் அவர்களின் தலைமையிலான குழுவினர் இக்கடத்தலை செய்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.