திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் 25ஆவது நினைவு தினம் இன்று நினைவுகூரப்பட்டது.
(1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11) இதே போன்றதொரு நாளில் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர்.
இதனை நினைவு கோரும் முகமாக அப்பகுதி மக்கள் குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கமானது, ஆனால் இந்த வருடம் பாரிய இராணுவத்தலையீட்டுடனும் அச்சுறுத்தலுடனும் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.
பூஜை வழிபாடுகளை செய்தி சேகரிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் குறித்த படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்று கூடி விழக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.