எனது கூட்டங்களுக்கு செய்தி எடுப்பதற்கு சக்தி டிவி ஊடகவியலாளர்கள் வரக் கூடாது என பிள்ளையான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிள்ளையான் தொடர்ச்சியாக சக்தி டிவி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் நேற்று முன்தினம் சக்தி டிவி ஊடகவியலாளர் ஒருவரிடம் பிள்ளையான் தரப்பு எமது கூட்டங்களுக்கு இனி சக்தி டிவி ஊடகவியலாளர் வரத் தேவையில்லை வரக் கூடாது என கூறியதாக சக்தி டிவி ஊடகவியலாளர் ஒருவரிடம் கூறியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் சக்தி டிவி ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன் நிலையில் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் ஊடக இணைப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்.
"நாங்கள் எந்த ஊடகவியலாளரையும் எமது கூட்டங்களுக்கு வரவேண்டாம் என்று கூறவும் இல்லை அச்சுறுத்தவும் இல்லை ஆனால் மட்டக்களப்பில் உள்ள சக்தி டிவி ஊடகவியலாளரான உதயகாந் என்பவர் எமது கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக மிகவும் திட்டமிட்டு சக்தி டிவியை வழிநடத்துகின்றார். ஏற்கனவே இராஜாங்க அமைச்சர் வியாழேந்தரனிடம் ஊடக செயலாளர் பதவி கேட்டு கெஞ்சி திரிந்தவர். தற்போது எங்களிடம் வந்து ஊடக உத்தியோகத்தர் பதவி கேட்டு கெஞ்சி திரிகிறார் அதை நாங்கள் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக அண்மையில் வாழைச்சேனையில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை மட்டக்களப்பிற்கு அழைத்து ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தச் சொல்லி அதில் எமது தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு ஏசுமாறு கூறி அதனை பதிவு செய்து சக்தி டிவிக்கு அனுப்பியுள்ளார். இதை விட எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சக்தி டிவி ஊடாக பிரபலப்படுத்துவதாக கூறி தொடர்ந்து எமது அலுவலகத்திற்கு வந்து போகும் சக்தி டிவி ஊடகவியலாளர் உதயகாந் எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பேசிய பல வீடியோக்களை ஊடகவியலாளர் சிறிரங்காவிற்கு அனுப்பி உள்ளமை எமக்கு தெரிய வந்துள்ளது. கிழக்கில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட உள்ள சிறிரங்காவின் உளவாளியாக செயற்படும் சக்தி டிவி ஊடகவியலாளர் உதயகாந் அவர்கள் குறித்து அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில். சக்தி டிவி ஊடகவியலாளர் உதயகாந் எமது கட்சி தலைவரின் நடவடிக்கைகள்,கட்சியின் செயற்பாடுகள் குறித்து சக்தி டிவி ஊடகவியலாளர் என்ற போர்வையில் கண்காணித்து ஊடகவியலாளர் சிறிரங்கா உட்பட பல புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பியது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இன் நிலையில் இது குறித்து சக்தி டிவி ஊடகவியலாளர் சிலரிடம் பேசி இருந்தோமே தவிர நாங்கள் யாரையும் வரவேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் சக்தி டிவி ஊடகவியலாளர்கள் குறித்து அவர்களது பக்கச்சார்பான செயற்பாடுகள், எமது கட்சிக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து மகாராஜா நிறுவனத்திற்கு விரைவில் தெரியப்படுத்துவோம் ஊடகங்கள் அரசியல் செய்யக் கூடாது ஆனால் இங்கு ஊடகவியலாளர்களே அரசியல் செய்கின்றனர் என அவர் கூறினார்.