முடியாததை எல்லாம் தான் செய்து காட்டுவேன் என்று கங்கணம் கட்டும் சாணக்கியன் !





அண்மைய காலமாக தமிழ் சிங்கள ஊடகங்களில் அதிகாமாக உச்சரிக்கப்படும் ஒரு பெயர் . 

30 வயதே நிரம்பிய இளைஞன் . இலங்கையில் தெற்கு பிரதேசத்தில் பிறந்து தெரிகில் வளர்ந்து கிழக்கில் எழுந்து பட்டொளி வீசும் இளம் தமிழ் அரசியல்வாதி .

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சாணக்கியன் உள் வாங்கப்பட்டதிலிந்து இன்று வரை சாணக்கியனை விமர்சிப்பவர்களும் உண்டு . பாராட்டுக்குபவர்களும் உண்டு . 

சாணக்கியனை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை எல்லாம் காழ்ப்புணவு விமசனம் என்றோ அல்லது பிழையானவை என்றோ நாம் ஒதுக்கிவிட்டு செல்ல முடியாது . ஆனாலும் அந்த விமர்சனங்கள் எல்லாம் சாணக்கியனின் கடந்த காலங்களோடு தொடர்பு பட்டவையே . 

முப்பதே வயதான சாணக்கியனின் கடந்தகாலத்தை விட்டுவிட்டு , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக மட்டும் வைத்து அவரை நோக்கினால் , இன்றய நிலையில் சாணக்கியன் தான் கடும் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எனலாம் . 

பாராளுமன்ற உறுப்பினராகியதிலிருந்து இன்று வரை அவரது செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைளை உற்று நோக்கினால் அவரளவுக்கு தமிழ் தேசிய நலன் சார்ந்து செயல்பட்டவர்கள் யாரும் இல்லை எனலாம் ( கூட்டமைப்புக்குள் ) 

கிழக்கு மாகாணத்தில் , அரசோடு இருந்தும் பிள்ளையான் , வியாழேந்திரன் , கருணா ஆகியோரால் செய்ய முடியாததை எல்லாம் தான் செய்து காட்டுவேன் என்று கங்கணம் கட்டி செய்து காட்டி வருகிறார் .

அரசோடு சேர்ந்து , மக்களுக்கு உதவி செய்து , தமிழ் தேசிய கூட்டமைப்பை இல்லாதொழிக்கலாம் என்று கனவு கண்டோருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார் சாணக்கியன் . 

தனது பேரனின் பெயரில் உள்ள தொண்டுநிறுவனம் மூலம் கிழக்கு மக்களுக்கு அளப்பெரிய உதவிகளை செய்து வருகிறார்  

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலாவதாக வீதியில் இறங்கி நிக்கிறார் . 

பாராளுமன்றில் தமிழர் தரப்பாக எந்தவித விட்டுக்கொடுப்புமில்லாமல் , உரத்து குரல் கொடுத்து வருகிறார் . 

ஒரு இனம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினராக , ஒரு இனத்துக்கு தேவையான , செய்ய கூடியவற்றை எல்லாம் செய்து வருவதால் , ஒரு இளைஞனாக இருந்து இதை செய்து வருவதால் அணைத்து இளைஞர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறார் . 

இதை பார்த்து சிலர் சாணக்கியனின் கடந்த கால வரலாறு தெரியாதா ? ஏன் பாராட்டுகிறீங்க ? என்று கேட்கிறார்கள் . 

சாணக்கியனின் கடந்தகால வரலாறு உங்களை போலவே எங்களுக்கும் தெரியும் . இளைஞராக இருப்பவர்கள் தடுமாறுவது வழமையானது . தெற்கில் இருந்த இளைஞன் ஒருவன் தடுமாறியது அதிசயமானது அல்ல . ஆனால் இனி வரும் காலத்தில் அவன் தடுமாற்றமில்லாது இருந்தால் போதும் 

தேர்தலின் பின்னர் , இந்த நிமிஷம் வரை அவனது பாதையில் தடுமாற்றம் இல்லை . மாறாக உறுதியாக உரமாக நிக்கிறான் . இனியும் நிப்பான் என்று நம்புவோம் . 

இதே பாதையில் , இதே உறுதியுடன் அவன் இருக்கும் வரை , அவனுக்கு பக்கபலமாக இருப்போம் . அதனால் மக்களுக்கு கிடைக்கும் நமைகளை கிடைக்க செய்வோம் 

நன்றி .
புதியது பழையவை