பெருமளவான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்!



துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பகுதியில் வைத்து நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், பொலிஸ் குழுவொன்று விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கி மற்றும் கூறிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட - பத்தட்டுவன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்கள் 16 மற்றும் 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மற்றும் 4 கத்திகள் என சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இந்த ஆயுதங்களை எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது தொடர்பிலும் , இவற்றை ஏதேனும் குற்றச்செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளாரா என்பது தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
புதியது பழையவை