பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், மட்டக்களப்பில் ஏற்பட்ட எழுச்சியையடுத்து, கிளிநொச்சி ஊடாகவும் போராட்டம் செல்ல வேண்டுமென சி.சிறிதரன் எம்.பி தரப்பினர் விடுத்த கோரிக்கையையடுத்து, கிளிநொச்சி ஊடாக பேரணி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.
இதன்படி, வரும் 7ஆம் திகதி பேரணி யாழ்ப்பாணத்தை சென்றடையும்.