கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை தாரியின் மனைவியான ‘சாரா’ என அழைக்கப்படும் புலஸ்தினி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வந்து விசாரிக்கப்படவில்லை.
ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போதிலும், அதற்கு பதிலாக இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்த போதிலும், அந்த பெண்ணை விசாரிக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.