பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்சிறப்பாக இடம்பெற்றது.
157 ஆவது பொலிஸ் வீரர்கள் தினநிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற போலீஸ் வீரர்கள் தின நிகழ்வில்
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பொலீஸ் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்த போலீசாருக்கு 2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நினைவாக மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்டபொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் கள்.ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டார்கள்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இன்று வரை ஆயிரத்து 311 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சேவையின் போது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதோடு ஆயிரத்து 620 பேர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளார்கள்.
கடமையின்.போது குற்றவாளிகள் எதிரிகளை கைது செய்யும் நடவடிக்கையின் போது அங்கவீனமாக்கப்பட்டுள்ள களுக்குரிய அனைத்து வசதிகளும் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பபடுகின்றமை குறிப்பிடத்தக்கது