உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி, இன்றும் கறுப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று மூன்றாவது தடவையாகவும் கறுப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்கமைய, குறித்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வரை, தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பேராயர் கூறியுள்ளார்.
தம்மால் முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு, ஒரு பயணம் மாத்திரமே எனவும், கருப்பு ஞாயிறு பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.