குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யாத 22 இலட்சத்துக்கும் அதிகளவான குடும்பங்கள்




குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யாத 22 இலட்சத்துக்கும் அதிகளவான குடும்பங்கள் நாட்டில் உள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

இதில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள 26 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 22 மில்லியன் குடும்பங்களுக்கு குடி நீர் வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியுமென தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை