திருகோணமலை பகுதியில் மோட்டார் குண்டு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு வெடித்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் வைத்திருந்த மோட்டார் குண்டை கிரைண்டர் மெசின் மூலமாக அறுத்து மருந்துகளை எடுக்க முற்பட்டபோதே குண்டு வெடித்து அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சீனன்வெளி பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து ஜெகன் எனும் 45 வயதுடைய குடும்பஸ்தர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் உறவினர்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார் எனவும் தெரிவித்துள்ளனர்.