மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதான வீதியினை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் படுகாயம் அடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்னர்.
சத்தார் வீதி மாவடிவேம்பு-02 எனும் முகவரியினை சேர்ந்த செல்லன் அருணாச்சலன் வயது (61) செங்கலடி பிரதாக வீதியூடாக வாழைச்சேனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி அதே வீதியூடாக துவிச்சக்கர வண்டியூடாக வீதியினை கடக்க முற்பட்ட குறித்த நபர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர்; பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்