கணக்காளர் சேவையில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்ற மட்டக்களப்பு தீபனுக்கு பாராட்டு


இலங்கை கணக்காளர் சேவை (SLAcS) பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 1ம் இடம் பெற்றுக் கொண்ட இராஜேந்திரன் தீபனுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி, ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் தீபன் என்பவரே இவ்வாறு SLAcS பரீட்சையில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் செங்கடி பிரதேசசபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன் மற்றும் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியு ஆகியோர் இராஜேந்திரன் தீபனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை