மட்டக்களப்பில் இன்று அன்னை பூபதியின் 33ம் ஆண்டு நினைவு நிகழ்வை ஒட்டியும், தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல் சம்பந்தமான விசாரணைக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு எத்தனித்துள்ளமை புலனாய்வு மூலம் பொலிஸார் அறிந்துள்ளனர்.
இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்பதாலும், தற்போது நாட்டில் பரவும் கொரோனா நோய் வேகமாக பரவும் என்பதாலும் இவ்வாறான எந்த ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் செய்வது சட்டத்துக்கு முரணானது என அதில் குறிப்பிட்டு மேலும் 26 பெயர் விபரங்களையும் குறிப்பிட்டு பலரிடம் நேற்று பொலிஸார் வீடுகளுக்குச் சென்று நேரடியாக கையளித்துள்ளனர்