தாமரைப்பூ பறிக்கச்சென்ற. இளைஞன் குளத்தின் சேற்றில் சிக்கி மரணம்


மரண வீட்டிற்கு சென்று திரும்பிய இளைஞன் குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற போது குளத்தின் சேற்றில் சிக்கி மரணமடைந்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாங்கேணி-02 பிரதான வீதியைச் சேர்ந்த 21 வதுடைய மகேந்திரன்-கஜேந்திரன் என்பவர் இன்று அதிகாலை தனது உறவினரின் மரண வீடோன்றிக்கு சென்று தனது வீட்டுக்கு திரும்பிச் செல்லும் போது தாமரைக்குளத்தில் உள்ள தாமரைப்பூவினை ஆய்வதற்கு குளத்தில் இறங்கி சென்றபோது குளத்தினுள் உள்ள சேற்றில் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.



புதியது பழையவை