பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், யானைகள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளன




பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், யானைகள் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளன என்று,  ஜீவகாருண்ய அமைப்புக்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பற்றைக்காட்டுப் பகுதிகளில் கொட்டப்படும்  குப்பைகளில், அதிகளவில் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன .

பட்டினியால் வாடும் யானைகள், மின்சார வேலிகளை உடைத்துக் கொண்டு கிராமத்தினுள் புகுந்து இந்தக் குப்பை மேட்டில் பொதிகளாகக் கட்டப்பட்டு ஒதுக்கப்படும் குப்பைகளை அவ்வாறே விழுங்கி விடுகின்றன என்றும் இதனால் உணவு சமிப்பாட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் யானைகள், நாளடைவில் உயிரிழக்கின்றன என்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யானைகளின் மல எச்சங்களில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியளவுக்கு மோசமான கழிவுகள் காணப்படுகின்றன என்றும் மேற்படி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
எனவே இப்பிரச்சினையிலிருந்து யானைகளை மீட்டெடுப்பதற்கு, கழிவு முகாமைத்துவத்தில் முறையான திட்டமிடல்கள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள மேற்படி அமைப்பு துறைசார்ந்தவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
புதியது பழையவை