கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர்.
ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்று முன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டி நடைபெற்றது.
அப்போட்டி உடல்நிறையைக்கருத்திற்கொண்டு 5 பிரிவுகளாக நடாத்தப்பட்டன. அம்பாறை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.