இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "சைக்கிள் ஓட்டுதல் ஞாயிறு" நிகழ்ச்சித்திட்டம் சம்மாந்துறை முபோ விளையாட்டு கழத்தின் தலைவர் கே.எல்.எம் ஷக்கி தலைமையில் இன்று (7) சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சம்மாந்துறை சிறுவர் பூங்காவிலிருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உடல் ஆரோக்கியம் மேலோங்கும் என்பதுடன் சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படாது என்று இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சைக்கிள் ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும் எமக்கான பிரத்தியோக ஏற்பாடுகளை வீதிகளில் செய்து தந்தால் இதனை தினமும் செய்வதில் எங்களுக்கு எவ்வித தடையும் இருக்காது என்று தெரிவித்தனர்.