ஆரையம்பதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!

செங்குந்தர் வீதி ,ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த  இளம் குடும்பஸ்தர் கேசநாதன்-றோஷான் வயது 25 என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகறாரு காரணத்தினால் தனது மனைவி அவரின் தாயாரின் வீட்டுக்கு சென்றதனால் பல தடைவை  தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியும் பதிலழிக்காத நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற  காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை